இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் - ப.சிதம்பரம்


இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் - ப.சிதம்பரம்
x

கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் நிதி மந்திரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 129 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் நிதி மந்திரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றி .சட்டமன்றத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது

இதனை ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலாகப் பார்க்கக் கூடாது. இந்திய அரசியல் சாசனத்தின் உயரந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்படவேண்டும் .பெரும்பான்மை மேலாதிக்கம், மதக்காழ்ப்புணர்வு, வெறுப்பு, வன்செயல் என்று சரிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய நாட்டைத் தற்காத்து வெற்றி பெற்றிருக்கிறோம் என்று பள்ளுப் பாட வேண்டும்

இனி இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story