'மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு இருக்கும் போல... எனக்கு தெரியாது' - அண்ணாமலை


மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு இருக்கும் போல... எனக்கு தெரியாது - அண்ணாமலை
x
தினத்தந்தி 21 Sept 2022 6:11 PM IST (Updated: 21 Sept 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

கடைசி காலத்தில் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதி முடித்தார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,

சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்கவே ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை திமுக அனுமதிக்கிறது. இந்து என்பது மதமே கிடையாது. இந்து என்பது வாழ்வியல் முறை.

சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்ப்பட்டது கிடையாது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ள சனாதன தர்மம் பற்றி ஆ.ராசாவுக்கு தெரியாது.

சனாதனம் குறித்த ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் நடத்தாது. இதுபோன்ற எம்.பி மக்களிடையே வேண்டாம் என கையெழுத்து இயக்கம் மட்டும் நடத்துவோம். அனைத்து மக்களுக்கும் மோட்சம் என்பதே சனாதன தர்மத்தின் குறிக்கோள்.

மேலும், சனாதன தர்மத்தின் படி எந்த ஒரு சாதிக்கும் உயர்சாதி, கீழ்சாதி என்று சொல்ல அருகதை கிடையாது என்று மாற்றத்தை கொடுத்த ராமானுஜர் பிறந்த மண் இது. அதனால் தான் கடைசி காலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியே ராமானுஜரின் சரித்திரத்தை எழுத ஆரம்பித்தார்... எழுதி முடித்துவிட்டார். அதன் மூலமாக தனக்கு மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு இருக்கும் போல... எனக்கு தெரியாது. நாம் பார்த்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story