நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களை ஏமாற்ற மாட்டேன். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக போல் மக்களை ஏமாற்ற மாட்டோம்.
என்ன விமர்சனம் வந்தாலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் எங்களுடன் பங்கேற்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story