சட்டமன்றமே எங்களை அங்கீகரித்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் - ஓ.பன்னீர் செல்வம்


சட்டமன்றமே எங்களை அங்கீகரித்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் - ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 17 Oct 2022 11:59 AM IST (Updated: 17 Oct 2022 12:43 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றமே எங்களை அங்கீகரித்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை

சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மேலும் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக சபைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமைந்தார். சட்டசபையில் இன்றைய அலுவல்கள் அனைத்தும் முடிவடைந்த பின் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவைக் கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

அ.தி.மு.க. சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். எம்.ஜி.ஆர், தொண்டர்களுக்காகத்தான் அ.தி.மு.க.வை தொடங்கி மூன்று முறை முதல்வராக இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின் பொதுச்செயலாளராக பதவியேற்று முதல்வராகவும் பொறுப்பேற்று ஆட்சி செய்தார்.

அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அ.தி.மு.க. சட்ட விதி,அடிபிறழாமல் கட்டிக்காத்த மாண்பு,பலநூறு ஆண்டுகளானாலும் சட்டவிதியை எந்தவித மாசுவும் படாமல் காக்கும் பொறுப்பில் இருக்கிறோம்; தொண்டர்கள்தான் அடித்தளம்,ஆணிவேர்.

சட்டமன்றமே எங்களை அங்கீகரித்தது பாசிட்டிவாக பார்க்கிறேன்.

பிரிவினால் தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். கழகம் இணைந்தால்தான் நல்லது' என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.


Next Story