ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் மோசடி நபருக்கு வலைவீச்சு


ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் மோசடி நபருக்கு வலைவீச்சு
x

சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய மோசடி நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை,

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுபாஷ் என்ற நபர், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக்கொண்டு பணிமாற்றம் போன்ற விஷயங்களில் தலையிட்டு வந்துள்ளார். இதுகுறித்து பெண் உதவி செயற்பொறியாளர் ஒருவர் புகாரின் பேரில், மின்சார வாரிய விஜிலென்ஸ் பெண் இன்ஸ்பெக்டர் செல்வராணி விசாரணை நடத்தி வந்தார்.

இதற்கிடையில் சுபாஷ், இன்ஸ்பெக்டர் செல்வராணியிடம் போனில் பேசி மிரட்டினாராம். தனக்கு பாதகமாக அறிக்கை கொடுத்தால், உன்னை விடமாட்டேன் என்று சுபாஷ் பயமுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வராணி, சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

தேடுதல் வேட்டை

இன்ஸ்பெக்டர் ராஜாராம் இது தொடர்பாக சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். சுபாஷை கைதுசெய்ய தேடுதல் வேட்டை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சுபாஷ் மீது ஏற்கனவே மதுரவாயல் போலீசார் ஒரு மோசடி வழககுப்பதிவு செய்துள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி, வேலைவாங்கித்தருவதாக ஏராளமானவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்த வழக்கில் சுபாஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Next Story