மரக்காணம் தாலுகாவில் விளிம்புநிலை மக்கள் 8 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்கினர்


மரக்காணம் தாலுகாவில் விளிம்புநிலை மக்கள் 8 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்கினர்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் தாலுகாவில் விளிம்புநிலை மக்கள் 8 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்கினர்.

விழுப்புரம்

களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் தமிழக முதல்-அமைச்சரின் முகவரி திட்ட மனுக்கள், இணையவழி சான்றுகள், பட்டா மாற்ற மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரும் மனுக்கள், புதிய குடும்ப அட்டை கோரி வரப்பெற்ற மனுக்கள் மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் அடுக்குத்திட்டத்தில் அனுமந்தை மற்றும் தென்னேரி கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு கேடயத்தை வழங்கினர். மேலும் மரக்காணம் தாலுகாவை சேர்ந்த வீட்டுமனை அற்ற விளிம்பு நிலை மக்கள் 8 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், அரசு அதிகாரிகள் சிவா, சுந்தர்ராஜன், நில அளவை அதிகாரி சீனுவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story