சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஐஸ் வியாபாரி சாவு


சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஐஸ் வியாபாரி சாவு
x

திருக்காட்டுப்பள்ளி அருகே சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஐஸ் வியாபாரி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி கட்டவெட்டியார் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது53). சைக்கிளில் சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று பூமிநாதன் வழக்கம்போல் சைக்கிளில் கல்லணைக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து விட்டு திரும்பி வந்தார். அப்போது நேமம்கிராமம் அருகே வந்த போது பூமிநாதன் மயங்கி சாலையில் விழுந்தார். இதில் .தலையில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பூமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story