44 பேருக்கு அடையாள அட்டை
44 பேருக்கு அடையாள அட்டை
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வெள்ளிக்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடப்பது வழக்கம். நேற்று நடந்த முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், நரம்பியல் மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்கினார்கள்.
நேற்றைய முகாமில் 44 பேருக்கு புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள 12 பேருக்கு வயதை தளர்வு செய்து மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story