மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
x

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்கதது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு குறைபாடுகள் உடைய 276 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 182 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும், 23 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவும், 96 பேருக்கு தேசிய அடையாள அட்டை பதிவும், 173 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் வங்கிக்கடன் வேண்டி 17 பேரும், பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 23 நபர்களும், ஊனமுற்றோர் உதவித்தொகை பெற 38 நபர்களும், நவீன செயற்கைக்கால் வேண்டி 6 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 நபர்களும், வீல்சேர் வேண்டி 7 நபர்களும் விண்ணப்பித்தனர். முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் முகமது அமீன் உணவு வழங்கினார். துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story