மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
x

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 179 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

57 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 79 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 108 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் 21 பேருக்கு பெட்டிக்கடை வைப்பதற்கு வங்கி மானிய கடன் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

செயற்கை கால் வேண்டி 5 நபர்களும், அறிவு சார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 19 நபர்களும், வங்கி கடன் வேண்டி 10 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 9 நபர்களும் விண்ணப்பித்தனர்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story