தாமிரபரணி ஆற்றில் கண்டெடுத்த சிலைகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு


தாமிரபரணி ஆற்றில் கண்டெடுத்த சிலைகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
x

தாமிரபரணி ஆற்றில் கண்டெடுத்த சிலைகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு பகுதிகளில் பழங்காலத்தைச் சேர்ந்த 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் பெண் பக்தை கற்சிலைகளும், முறப்பநாடு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பெண் பித்தளை சிலையும் இதில் அடங்கும்.

இந்த சிலையை உள்ளூர் மக்கள் கண்டுபிடித்து தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்காக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளியிடம் 3 சிலைகளையும், அதற்கான ஆவணங்களையும் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கவுரவ்குமார், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அதிகாரி ஆதிமூலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story