ஆற்றில் கிடந்த ஆண்-பெண் சிலைகள்


ஆற்றில் கிடந்த ஆண்-பெண் சிலைகள்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் ஆண்-பெண் சிலைகள் கிடந்தன

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ரெயில் பாலத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்க வசதியாக படித்துறை உள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்களும் இந்த படித்துறையை பயன்படுத்தி ஆற்றில் குளித்து வருகிறார்கள். நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுக்குள் கிடந்த ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டு காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பார்த்தபோது சிமெண்டு கான்கிரீட்டால் செய்யப்பட்டிருந்த ஒரு ஆண் மற்றும் பெண் சிலைகள் கிடந்தன. இவற்றின் எடை அதிகமாக இருந்ததால் வெளியே எடுத்து வரமுடியவில்லை. இதையடுத்து அவற்றை ஆற்றிலேயே போட்டு விட்டு சென்று விட்டனர். ஆற்றில் குளிக்கும்போது இந்த சிலைகள் தட்டுப்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிலைகளை முறைப்படி அப்புறப்படுத்த ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story