அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தகவல்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து சிலை வைக்கும் பொறுப்பாளர்கள், போலீஸ் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். காவல் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பேசும் போது, விநாயகர் சிலைகளை போலீசார் அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். அந்த இடங்களில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிலை வைக்கப்படும் இடங்களில் தகரத்தினால் ஷெட் அமைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, பொதுஅமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.