சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால்பெற்றோர்கள் மீது நடவடிக்கை


சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால்பெற்றோர்கள் மீது நடவடிக்கை
x

சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் ஆலோசனைப்படி வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், நெப்போலியன், நந்தகோபால், ரெங்கராஜ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொய்யல், புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், காகிதபுரம், தவுட்டுப்பாளையம், கடைவீதி, புகழூர் நான்கு ரோடு மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த சிறுவர்கள் மீதும், அவர்களது பெற்றோர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்களது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி அளித்தால் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story