கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் ஆணையர் தான் பொறுப்பு - ஐகோர்ட்டு அதிரடி


கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் ஆணையர் தான் பொறுப்பு - ஐகோர்ட்டு அதிரடி
x

கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் ஆணையர் தான் பொறுப்பு என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவது, பாதாள சாக்கடைகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்டவை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு ஆணையர் தான் பொறுப்பு என்ற அதிரடியான கருத்தை சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 26-ந்தேதி மாதவரத்தில் பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய 2 நபர்கள் உயிரிழந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் புகார் குறித்து ஒருவாரத்திறகுள் அறிக்கை அளிக்கை சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய ஐகோர்ட்டு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு ஆணையர் தான் பொறுப்பு என்ற அதிரடியான கருத்தையும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story