நகராட்சி வரிகளை செலுத்தாவிட்டால்கடும் நடவடிக்கை
ராமநாதபுரத்தில் நகராட்சி வரிகளை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் கூறியதாவது:-
ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, காலியிட வரி, தொழில்வரி ஆகிய கட்டணங்களை நிலுவையில் வைத்துள்ளவர்களின் பெயர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் நகராட்சி கணினி வரி வசூல் மையத்தில் உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கோர்ட்டு நடவடிக்கை மூலம் அபராதத்துடன் வரி வசூலிக்கப்படும்.
நகராட்சி வரி கேட்பு அறிவிப்பு நோட்டீசில் உள்ள க்யூ ஆர் கோடு பயன்படுத்தி ஆன்லைனில் வீட்டில் இருந்தவாறே வரிகளை செலுத்திட வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கபட்டு உள்ளது.
சொத்து வரி செலுத்தாத பலரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.