தேசிய கல்விக்கொள்கை வந்தால் மாநில மொழி இருக்காது; சீமான் பேட்டி


தேசிய கல்விக்கொள்கை வந்தால் மாநில மொழி இருக்காது; சீமான் பேட்டி
x

தேசிய கல்விக்கொள்கை வந்தால் மாநில மொழி இருக்காது என்று சீமான் கூறினார்.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று சீமான் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான், நிருபர்களிடம் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கை வந்தால் எந்த மாநில மொழியும் இருக்கப் போவதில்லை. மத்திய அரசின் நோக்கமே இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான். தமிழ் என்பது ஒரு மாபெரும் கடல் என்று அண்ணா கூறியுள்ளார். ஆனால் அதை 5-ம் வகுப்பு வரை படித்தால் போதும் என்று இவர்கள் கூறுகின்றனர். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வயதில் அதையே அவர்களால் தாங்க முடியவில்லை. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன நிலை ஏற்படும், என்றார்.


Next Story