"அடுத்த பிறந்தநாளில் உதயநிதி அமைச்சரானால்..." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி
நல்ல வளர்ந்து வரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களை சந்திக்கையில் கூறியதாவது,
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளை அமைச்சராக கொண்டாடினால் மகிழ்ச்சி அடைவோம். நடந்தால் நல்லது, அதற்குரிய எல்லா தகுதிகளையும் உடையவர். எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இந்த உயிரோட்டமான அமைப்பை வழி நடத்திக்கொண்டிருக்கிற நல்ல வளர்ந்து வரும் தலைவராக உதயநிதி உள்ளார். அவர் எல்லா தகுதிகளுக்கும் சிறப்புடையவர், ஏற்புடையவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story