பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை பேச்சு


பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்: அண்ணாமலை பேச்சு
x

‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னை,

கொளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது ,

2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று சாமானிய மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தியாவில் பா.ஜ.க. எம்பிக்கள் உள்ள தலைநகரங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 3 தொகுதிகளில் திமுக குடும்ப ஆட்சி மட்டுமே நடப்பதால், அவர்களுக்கு சாமானிய மனிதனின் வலி தெரிவது இல்லை.குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சென்னையில் போதுமானதாக இல்லை.

சென்னையில் வாழ மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முழுமையாக சென்னை மாநகரை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். உலகத்தரம் வாய்ந்த சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்றால் மோடியின் கையில் சென்னையை ஒப்படைக்க வேண்டும்.

இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. அயோத்திக்கு 5 கோடி பேர் செல்வார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. 5 கோடி பேர் வருகையால் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் . ராமர் கோவில் நமக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story