கர்நாடகாவிற்கு சென்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 'கோ பேக்' சொல்வோம் - அண்ணாமலை
கர்நாடகாவிற்கு சென்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ‘கோ பேக்’ சொல்வோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கர்நாடகாவை பொறுத்தவரை காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பாஜக நிச்சயமாக எந்தவித அரசியலும் செய்யவில்லை; காரணம் கர்நாடகா நமக்கு காவேரி நீரை தருகிறது. மேகதாது அணை மூலம் சிவக்குமாரின் தொகுதிதான் அதிகம் பயன்பெறும். காங்கிரசையோ, டி.கே.சிவக்குமாரையோ கண்டிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை.
கர்நாடகாவிற்கு சென்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 'கோ பேக்' சொல்வோம். மேகதாது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் கர்நாடகாவிற்கு முதல்-அமைச்சர் சென்றால் போராட்டம் நடத்துவோம். முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமை விட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story