சிறுதொழில் செய்தால் பொருளாதார நிலை உயரும்
கிராம மக்கள் சிறுதொழில் செய்தால் பொருளாதார நிலை உயரும் என்று கலெக்டர் பேசினார்.
வேலூர்
காட்பாடி தாலுகா கரசமங்கலம் கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கிராமங்கள் மேம்பாடு அடைய பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகளை கட்டிகொடுக்கிறோம். கிராம மக்களின் பொருளாதாரம் உயர சிறுதொழில் செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story