தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்


தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்
x

தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாப்பட உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகள், வீடுகளில் இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளில் அனைத்து குடியிருப்புகளிலும் இன்று முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும். மேலும் அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தன்று சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் சாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடின்றி தேசியகொடி ஏற்ற வேண்டும்.

தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக கிராமப்புறங்களில் ஆட்சேபனைகள், புகார்கள் ஏதாவது இருப்பின் 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story