கோவிலுக்கு வேண்டி போனால் எதாவது நடக்கும் ...! அண்ணாமலை பாதயாத்திரை குறித்து சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
மணிப்பூர் வன்முறையை மிக எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். மணிப்பூரில் நடைபெற்றது தேச அவமானம். பாஜக கலவரத்தை ரசிப்பார்கள். கலவரத்திலே கட்சியை நடத்தி, கட்சியை வளர்த்து வந்தவர்கள் பாஜக. தேர்தல் லாபத்திற்காகவும், அரசியலுக்காகவும் மணிப்பூரில் வன்முறை நடத்தப்படுகிறது என கூறினார்.
மேலும் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான்,
கோவிலுக்கு வேண்டி போனால் எதாவது நடந்தாலும் நடக்கும், கிடைக்கும். நடையாய் நடந்து ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்வார்கள், அதுபோல தான் இதுவும் என கூறினார்.
Related Tags :
Next Story