ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் ஏட்டு அதிரடி கைது


ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் ஏட்டு அதிரடி கைது
x

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் போலீஸ் ஏட்டு அதிரடி கைது.

சென்னை,

ஐ.எப்.எஸ்.மோசடி நிதிநிறுவன வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் ஏற்கனவே 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த ஹேமந்திரகுமார் (வயது 47) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முன்னாள் போலீஸ் ஏட்டு ஆவார். தமிழக காவல் துறையில் ஏட்டாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

இவர் 2 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.550 கோடி வரை பணம் வசூலித்து ஐ.எப்.எஸ். நிறுவனத்துக்கு கொடுத்து, பெரிய அளவில் கமிஷன் தொகை பெற்றுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இவர் ஐ.எப்.எஸ். நிதிநிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story