சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி


சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ், த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தாக்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல்ஹக்கீம், மாவட்ட தலைவர்கள் பசல்முகமது, சையத்உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், துரை.ரவிக்குமார் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளர் சக்கரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்குத்தூஸ், துணை செயலாளர் அமீர்பாஷா மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story