ஐகோர்ட்டில் இப்தார் நோன்பு
மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் (எம்.பி.ஏ.) சார்பில் 12-வது ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை
மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் (எம்.பி.ஏ.) சார்பில் 12-வது ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் அப்துல்குத்தூஸ், சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் பார் கவுன்சில் உறுப்பினர் தாளை முத்தரசு, வக்கீல்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சீனிவாசராகவன், ஆண்டிராஜ், ஆனந்தவள்ளி, கார்த்தி, நாராயணகுமார், அன்பரசு கிருஷ்ணவேணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.பி.ஏ. வக்கீல் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story