இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி


இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூா் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கடலூர்

பரங்கிப்பேட்டை

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் கே.சி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.என்.குமார் தலைமை தாங்கினார். அகத்தியர் பவுண்டேஷன் தலைவர் ஈஸ்வர் ராஜலிங்கம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி, பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இதில் குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, அவை தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி, பேரூராட்சி செயலாளர்கள் தமிழரசன், மாரிமுத்து, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, மாணவரணி பொருளாளர் சங்கர், ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் முடிவண்ணன், நிர்வாகிகள் வீரமணி, புவனகிரி செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், தச்சக்காடு மகேஷ், பூவாலை தாஸ், சிவக்குமார், நாகராஜன், கல்யாணம், டேங்க் சந்தோஷ், பாலமுருகன், பக்கிரிசாமி, ராஜேஷ் கண்ணன், கண்ணதாசன், வெங்கடேசன், பிரியா, ஜமாத் நிர்வாகிகள் உசேன், முகமது அலி, அப்துல் ஹக், அப்துல் அலீம், முகமது அன்வர், முகமது கவுஸ், அப்துல் கபூர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இஸ்லாமிய ஜமாத் தலைவர் ஹாஜா நஜிமுதின் சேட் நன்றி கூறினார்.


Next Story