போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு


போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி.ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் நகர போலீஸ் நிலையம் மற்றும் ஏ.எஸ்.பி.அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது ஏ.எஸ்.பி.ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.



Next Story