கோர்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தேனியில் ேகார்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் வக்கீல்கள் சங்க உறுப்பினர் ஜெயராம் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். பின்னர் தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில், கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் ஆறுமுகம், மூத்த வக்கீல்கள் வீரசிகாமணி, தங்கப்பா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இரணியல் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதுபோல், தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வக்கீல் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.