நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கானமதிப்பீட்டு தேர்வு வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கானமதிப்பீட்டு தேர்வு வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x

நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வு வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 ஊகத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பீட்டு தேர்வுக்கு இணையதளம் மூலமாக கடந்த மாதம் 2-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தேர்வுக்கு படிப்பவர்கள் விண்ணப்பித்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவு சார்பில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வின் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தேர்வை எழுத சுமார் 1,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு ஈரோடு கலைமகள் மேல்நிலை பள்ளிக்கூடம், செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடம், ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம் ஆகிய 4 மையங்களில் நடக்கிறது.

இந்தநிலையில் தேர்வுக்கான வினாத்தாள் ஈரோட்டுக்கு வந்தது. இந்த வினாத்தாள்கள் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அந்த அறைக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story