கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
ஆத்தூரை அடுத்துள்ள சேர்ந்தபூமங்கலம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூரை அடுத்துள்ள சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி- அம்பாள் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தடைந்ததும் தொடர்ந்து சுவாமி- அம்பாள் பல்லக்கில் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, சேர்ந்தபூமங்கலம் சைவ வேளாளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story