போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 36 மனுக்களில், 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story