ஜமாபந்தியில் 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு


ஜமாபந்தியில் 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

வேலூரில் நடந்த ஜமாபந்தியில் 4 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

வேலூர்

வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளாளில் சத்துவாச்சாரி உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 105 மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பென்னாத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பென்னாத்தூர், சோழவரம், காட்டுப்புத்தூர், விருபாட்சிபுரம், பலவன்சாத்து, இடையன்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், சாத்துப்பாளையம், நெல்வாய், பங்களத்தான், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடந்தது.

வேலூர் மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுமதி, வேலூர் தாசில்தார் செந்தில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்திக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், 62 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 4 மனுக்களுக்கு கலெக்டரின் உத்தரவின்பேரில் உடனடியாக தீர்வு காணப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) கணியம்பாடி உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது.


Next Story