போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு
போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு), வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), ஜனனி பிரியா (மங்களமேடு சரகம்) ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 31 மனுக்களில், 9 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.