50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு


50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

நாகப்பட்டினம்


நாகையில் நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இ.பி.எப். விழிப்புணர்வு முகாம்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் நிதி ஆப்கே நிகத் என்ற பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்திற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

முகாமுக்கு மாவட்ட வருங்கால வைப்பு நிதி ஒருங்கிணைப்பு அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

உடனடி தீர்வு

இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விபரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.


Next Story