ஒரே நாளில் 3 கோவில்களில் குடமுழுக்கு


ஒரே நாளில் 3 கோவில்களில் குடமுழுக்கு
x

கல்லூர் கிராமத்தில் ஒரே நாளில் 3 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் சிவலோகநாயகி, சமேத சிவலோகநாதர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள், இரட்டை பிள்ளையார் கோவில் ஆகிய 3 கோவில்களில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடந்தது.

4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story