ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி; ஒருவர் கைது


ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி; ஒருவர் கைது
x

எட்டயபுரத்தில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள நக்கலக்கட்டை கிராமத்தில் மனோகரன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு 16 ஏக்கர் 61 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக விற்பனை செய்ததாக மனோகரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

போலீஸ் விசாரணையில் தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்த சண்முகராஜ் என்ற அர்ஜூனன் என்பவர் சிலருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சண்முகராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருவதாகவும், மோசடியாக விற்பனை செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் வரை இருக்கும் என்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


Next Story