அமலோற்பவ அன்னை தேர் பவனி


அமலோற்பவ அன்னை தேர் பவனி
x

3 ஆண்டுகளுக்கு பிறகு அமலோற்பவ அன்னை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

3 ஆண்டுகளுக்கு பிறகு அமலோற்பவ அன்னை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமலோற்பவ அன்னை திருத்தலம்

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி மேட்டுப்பட்டியில் பிரசித்தி பெற்ற அமலோற்பவ அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மே மாதம் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தேர் பவனி நடைபெறவில்லை.

இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தேர்பவனி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஆலயத்தில் இருந்து தேர் பவனி கிளம்பியது.

தேர் பவனி

பின்னர் நேற்று காலை 7 மணி அளவில் மீண்டும் ஆலயத்திற்கு தேர் வந்து சேர்ந்தது.

இந்த தேர் பவனியில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்பவனி நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story