மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் வழங்கிய முக்கிய உத்தரவுகள்
மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நேற்று (டிசம்பர் 2-ந்தேதி) வரை 57 வேலை நாட்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நேற்று (டிசம்பர் 2-ந்தேதி) வரை 57 வேலை நாட்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது.
கோவில்களில் செல்போனுக்கு தடை
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:-
நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, 57 வேலை நாட்களில் 6,512 வழக்குகளை முடித்து வைத்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சில பொது நல வழக்குகளின் விவரம்:-
1.தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லலாம்.
2 பார்வையாளர்கள் வசதிக்காக அதிகாரிகள் இல்லா குழுவை நியமிப்பதன் மூலம் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
3. தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் மொபைல் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்த தடை
4. கோவில் நிலங்களை மயானத்திற்கு பயன்படுத்துவதை தடுத்தல்.
5. கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை மற்றும் கையால் சுத்தம் செய்பவர்களை பாதுகாத்தல்
6. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பல்லவ குகைக் கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கட்டுமானங்களை அகற்றுதல்.
அங்கீகாரம் பெறாத மனை
7. அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்வதை குறைத்தல்.
8.மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் காப்புக்காடுகளை பாதுகாக்க சட்ட விரோத செயல்களை சி.பி.ஐ. மூலம் நியாயமான விசாரணை நடத்துதல்
9. திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியத்தின் பிரெய்லி பதிப்பு வெளியீடு
10.மதுரை மாநகராட்சியில் பொது பூங்காக்கள் பராமரிக்க உத்தரவு
11. வன நிலங்களுக்கான கணக்கெடுப்பு மற்றும் எல்லைகளை நிர்ணயித்தல்.
12.பல்வேறு கோவில்கள் மற்றும் ஆதீனங்களின் நிலங்களை மீட்பது
13 மதுரை மாவட்ட கோர்ட்டில் மெட்டல் டிடெக்டர், பொருட்கள் ஸ்கேன் செய்யும் கருவி உள்ளிட்ட வசதிகளை வழங்குதல்.
14. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை அகற்றுதல்.
15. குற்றாலம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டவிரோத தனியார் நீர் வீழ்ச்சிகளையும் அகற்றுதல்.
16. கோவில்கள் மற்றும் தெய்வங்களின் பெயர்களில் போலி இணையதளங்களை தடை செய்தல்.
டாஸ்மாக் விற்பனை நேரம்
17. டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைப்பது தொடர்பான உத்தரவு
18. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடமாடும் ஆலோசனை மையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்தல்.
19. நீர்நிலைகள், அரசு நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. கட்டிடங்களின் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் ஆகியவையும் இந்த பெஞ்ச் மூலம் அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வங்கி கடன் வழக்குகளுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான விஷயங்களையும் இந்த பெஞ்ச் தீர்த்து வைத்தது.
அதாவது, பொது நல வழக்குகள், அப்பீல் மனுக்கள், அவமதிப்பு வழக்குகள், சிவில் ரிவிஷன் மனுக்கள், அவமதிப்பு அப்பீல் மனு, சீராய்வு மனு, 2-ம் நிலை அப்பீல், ஆட்கொணர்வு மனு உள்பட பல்வேறு வகையிலான வழக்குகள் என மொத்தம் 6,512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.