போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்


போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்
x

நகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

நகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு வழங்கி ஐகோர்ட்டு வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பரிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.

சாலையோர ஆக்கிரமிப்பு

அதேபோல நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள், காவல் துறையினருடன் இணைந்து அகற்றி, தடுப்புகள் வைத்து சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, உதவி ஆணையர் (கலால்) பானு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், சுரேஷ்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story