தனியார் நிறுவன ஊழியருக்கு 28 மாதம் சிறை தண்டனை


தனியார் நிறுவன ஊழியருக்கு 28 மாதம் சிறை தண்டனை
x

சேலத்தில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு 28 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

சேலம்

சேலம் கன்னங்குறிச்சி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த திலகவதி (63) என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மணிகண்டனுக்கு 28 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.


Next Story