தளியில் லஞ்ச வழக்கில் கைதான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு


தளியில் லஞ்ச வழக்கில் கைதான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 25 Jun 2023 1:15 AM IST (Updated: 25 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

ஓசூர் சின்ன எலசகிரியை சேர்ந்தவர் உயிஸ் ரகுமான்கான் (வயது23). இவர் தளி பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த தொழிற்சாலைக்கு செல்ல இணைப்பு சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்று கேட்டு, தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர் விண்ணப்பம் செய்தார். அப்போது சான்று பெற்று தர ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அலுவலக உதவியாளர் புட்டண்ணய்யா, தெரிவித்தார். இதுகுறித்து உயிஸ் ரகுமான்கான் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை உயிஸ் ரகுமான்கானிடம் கொடுத்து அனுப்பினர். அவர் தளி ஒன்றிய அலுவலகத்தில் பணத்தை கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, உதவியாளர் புட்டண்ணய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 ந் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தர்மபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story