நன்னடத்தையை மீறியவருக்கு சிறை தண்டனை


நன்னடத்தையை மீறியவருக்கு சிறை தண்டனை
x

நெல்லையில் நன்னடத்தையை மீறியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த பழனி மகன் பேராச்சி செல்வம் (வயது 25). இவருக்கு 1 ஆண்டுக்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம், நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனரும், நிர்வாக செயல் துறை நடுவருமான சீனிவாசன் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய துணை கமிஷனர், பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட பேராச்சி செல்வத்துக்கு மீதமுள்ள 9 மாதம் 28 நாட்கள் (10-10-2023) வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story