நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு


நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு
x

நெல்லை அருகே நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கோடகநல்லூரை சேர்ந்தவர் தங்ககணபதி (வயது 53). இவருக்கு நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர், 6 மாதத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது.

அதன் பின்பும் 18-ந் தேதி அன்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் தங்ககணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நன்னடத்தை பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதற்காக சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் மாணிக்கவாசகம் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதன் மீது விசாரணை நடத்திய நடுவர் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக தங்ககணபதியை 2 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story