மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தான்குளம்:
நெல்லைமாவட்டம் முனைஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 28). அவரது நண்பர் ஒத்தக்காரன் (25). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் முனைஞ்சிப்பட்டியில் இருந்து சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு மோட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சாத்தான்குளம் ஆற்றுப்பாலத்தில் சென்ற போது திடீரென்று நிலைதடுமாறி தடுப்புசுவரில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் ைசக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.