தேனியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.20 கோடி மோசடி


தேனியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில்  முதலீடு செய்த ரூ.20 கோடி மோசடி
x

தேனியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.20 கோடி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தேனி

தனியார் நிதி நிறுவனம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் தேனியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் கூறுகையில், "தேனியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலரும் முதலீடு செய்தோம்.

ரூ.20 கோடி

அந்த முதலீட்டு தொகைக்கு பங்குத்தொகை தருவதாக கூறினர். சில மாதங்கள் மட்டும் பங்குத்தொகை கொடுத்தனர். அதன்பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர் சென்று விட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சுமார் ரூ.20 கோடி வரை முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதுகுறித்து ஏற்கனவே தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளோம். தேனி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு இல்லை என்பதால் திண்டுக்கல், மதுரை, கோவை மாவட்டங்களுக்கு நாங்கள் அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, தேனியில் பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கி தேனியிலேயே இந்த வழக்கு விசாரணை நடத்தி எங்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்றனர்.


Next Story