மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில்  வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு
x

தேனி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு கொடுத்தனர்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் மற்றும் வங்கிக்கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். முகாமில் 174 மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் கேட்டு மனு கொடுத்தனர். 3 பயனாளிகளுக்கு இளைஞர் ஊரக திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுவதற்கான உத்தரவு, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,780 மதிப்பில் காதொலி கருவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story