கோவில்பட்டி யூனியன் குழு சிறப்பு கூட்டத்தில் ரூ2.12 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி யூனியன் குழு சிறப்பு கூட்டத்தில் ரூ2.12 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி யூனியன் குழு சிறப்பு கூட்டத்தில் ரூ2.12 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
யூனியன் சிறப்பு கூட்டம்
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் சிறப்பு யூனியன் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிச்சாமி, யூனியன் ஆணையர் ராஜேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், யூனியனுக்கு உட்பட்ட 19 வார்டுகளிலும் யூனியன் பொது நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, யூனியனிலுள்ள தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் வசதிகளை மேற்கொள்வதற்கு பொது நிதியிலிருந்து ரூ.22.35 லட்சம் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ரூ.2.12 கோடியில் பணிகள்
மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள சமுதாய நலக்கூட கட்டிடம், பயணியர் நிழற்குடைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை அப்புறப்படுத்த பொது நிதியிலிருந்து ரூ.3.16 லட்சம் ஒதுக்கீடு செய்வது ஆக மொத்தமாக ரூ.2.12 கோடியில் திட்ட பணிகள் மேற்கொள்ள 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், யூனியன் உதவி பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், பொறியாளர்கள் படிபீவி, மேரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) தனலட்சுமி, யூனியன் பணி மேற்பார்வையாளர் வடிவேல் முருகன், யூனியன் குழு உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.