அனைத்து ரேஷன் கடைகளிலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்: கலெக்டர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபற உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் முதல் கட்டமாக வருகிற 24-ந் தேதி முதல் வரும் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்கள், நகராட்சி பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறுகிறது. எனவே இந்த முகாம்களில் மகளிர்கள், தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story