அல்லிநகரத்தில்கோவில் திருவிழாவில் பெண்ணிடம் திருட்டு


அல்லிநகரத்தில்கோவில் திருவிழாவில் பெண்ணிடம் திருட்டு
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அல்லிநகரத்தில் கோவில் திருவிழாவில் பெண்ணின் பை திருடுபோனது.

தேனி

போடி நந்தவனம் தெருவைச் சேர்ந்த வசந்தி (வயது 43). இவர், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலுக்கு, சித்திரை திருவிழா அன்று சாமி கும்பிட வந்தார். அப்போது பூஜைக்கான பொருட்கள் மற்றும் பணப்பையை ஒரு கட்டை பையில் வைத்திருந்தார். பின்னர் அவர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது பையை திருடி கொண்டு ஓடினாா். அவரை பிடிக்க முயன்றபோது சிக்காமல் தப்பி ஓடினார். இதுகுறித்து வசந்தி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து பையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.


Next Story